தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜப்பானில் 69 பேரின் உயிரை குடித்த ஹகிபிஸ் சூறாவளி

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் மத்திய, கிழக்கு பகுதிகளை புரட்டிப் போட்ட 'ஹகிபிஸ்' (Hagibis) புயலுக்கு இதுவரை 69 பேர் பலியாகியுள்ளனர்.

japan hagibis typhoon

By

Published : Oct 15, 2019, 9:20 PM IST

Updated : Oct 16, 2019, 2:58 AM IST

ஜப்பானின் மத்திய, கிழக்கு பகுதிகளை 'ஹகிபிஸ்' (Hagibis) புயல் தாக்கியது. புயல் மழையை தொடர்ந்து அபுஹமா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த புயலுக்கு இதுவரை 69 பேர் பலியாகியுள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இதுதொடர்பாக பேசிய பிரதமர் ஷின்சோ அபே, ”பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புக் குழுவினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

ஜப்பானில் புயலால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் வசதி இல்லை. 24 ஆயிரம் வீடுகளில் மின்சார வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையும் வாசிங்க :செருப்பில் விண்கல்லா?... உலகமே வியக்கும் 142 கோடி ரூபாய் மதிப்புள்ள ’தங்க செருப்பு’

Last Updated : Oct 16, 2019, 2:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details