பாகிஸ்தானில் இந்துக்கள் வழிபாடுகள் நடத்த இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கட்ட அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பலுசிஸ்தான், சிந்த் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான இந்து மக்கள் பாதுகாப்பு நலன் கருதி இஸ்லாமாபாத்தில் குடியேறிவருகின்றனர்.
இதனால் அவர்களுக்கான வழிப்பாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள், சுடுகாடு ஆகியவை அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றன. இதுகுறித்து பாகிஸ்தான் மத விவகாரத் துறை அமைச்சர் பிர் நூருல், மனித உரிமைகளுக்கான நாடாளுமன்றச் செயலர் லால் சந்த் மால்ஹி, பாகிஸ்தானின் இந்து கவுன்சில் நிறுவனர் ரமேஷ் உள்ளிட்டோர் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்தனர்.