பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீஃப் டிசம்பர் 2018ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஊழல் வழக்கு; நவாஸ் ஷெரீஃப்புக்கு பிணை மறுப்பு - இஸ்லாமாபாத்
இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
![ஊழல் வழக்கு; நவாஸ் ஷெரீஃப்புக்கு பிணை மறுப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3620549-thumbnail-3x2-nawaz.jpg)
Nawaz Sherif
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தன் மீது சாட்டப்பட்ட ஊழல் வழக்கை எதிர்த்து நவாஸ் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து உடல்நிலை சரியில்லை எனக் கோரி பிணை வழங்க நீதிமன்றத்தில் நவாஸ் தரப்பு நேற்று முறையிட்டது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதிகள் தற்போதைக்கு அவருக்கு பிணை வழங்க மறுத்து வழக்கை ஒத்திவைத்தது.
ஜூலை 2018ஆம் ஆண்டு மற்றொரு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.