இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே 65% வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவை வென்றார். தேர்தலில் சஜித் பிரேமதாச 28% வாக்குகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் மொத்தமாக 80% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், சிங்களர்கள் உள்ள பெருவாரியான மாவட்டங்களில் கோத்தபய ராஜபக்சேவிற்கு அதிக அளவில் மக்கள் வாக்களித்துள்ளனர். மறுபுறம் தமிழர்கள் அதிகம் இருக்கக்கூடிய இலங்கை வடக்கு, கிழக்கு பகுதிகளில் சஜித் பிரேமதாச கணிசமான வாக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.