உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். பல நாடுகளில், தடுப்பூசி மருந்துகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை உலகளவில் 6 கோடியே 85 லட்சத்து 68 ஆயிரத்து 678 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 63 ஆயிரத்து 132ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 74 லட்சத்து 62 ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.