சர்வதேச அளவில் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து அந்நகரில் அவசரகால நிலையை நேற்று (ஜன. 07) அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.
சர்வதேச கோவிட்-19 நிலவரம் தற்போதைய பாதிப்பு நிலவரம்
இதுவரை எட்டு கோடியே 85 லட்சத்து 12 ஆயிரத்து 240 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 லட்சத்து 6 ஆயிரத்து 853ஆக அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு கோடியே 36 லட்சத்து 19 ஆயிரத்து 979ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏழு லட்சத்து 98 ஆயிரத்து 721 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 940 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் மட்டும் இதுவரை இரண்டு கோடியே 21 லட்சத்து 32 ஆயிரத்து 45-க்கும் அதிகமான பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 74 ஆயிரத்து 124-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டன், ஜப்பானை ஆட்டிப்படைக்கும் கரோனா சர்வதேச நாடுகளின் நிலவரம்
உலக அளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். அங்கு நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பாதிப்பு பதிவாகிறது. இதுவரை அந்நாட்டில் இரண்டு கோடியே 21 லட்சத்து 32 ஆயிரத்து 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 74 ஆயிரத்து 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
சர்வதேச கோவிட்-19 நிலவரம் பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பாதிப்புகளைத் தற்போது சந்தித்துவருகின்றன. முன்னதாக, உருமாறிய கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக பிரிட்டன், ஜப்பானில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க:மக்களுக்கு முன்னுதாரணமாக மாறிய சிங்கப்பூர் பிரதமர்!