தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா! - உலகளவில் கரோனா பாதிப்பு

உலகில் இதுவரை கரோனா தொற்றால் 5,89,67,519 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 13,93,193 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நோய் பாதிப்புடன் 1,68,18,057 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

உலகளவில் கொரோனா பாதிப்பு
உலகளவில் கொரோனா பாதிப்பு

By

Published : Nov 23, 2020, 2:24 PM IST

ஹைதராபாத் :உலக அளவில் நேற்று (நவ.22) ஒரே நாளில் 4,86,006 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,34,237 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 44,404 பேருக்கும், இத்தாலியில் 24 மணி நேரத்தில் 28,337 பேருக்கும், ரஷ்யாவில் 24,581 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனா தொற்றால் 7,375 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 864 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 562 பேரும், மெக்ஸிகோவில் 550 பேரும், இந்தியாவில் 510 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பு

இதுவரை கரோனா தொற்றால் அமெரிக்காவில் 2,62,694 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் கரோனா தொற்றால் இதுவரை 1,69,197 பேரும், இந்தியாவில் 1,33,773 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details