உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸை (தீநுண்மி) கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறிவருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
உலகளவில் 5 கோடியே 53 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு! - கரோனா வைரஸ்
உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின எண்ணிக்கை 13 லட்சத்து 32 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.
![உலகளவில் 5 கோடியே 53 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு! rack](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:14:23:1605620663-9568188-912-9568188-1605599696698.jpg)
இதுவரை உலகளவில் ஐந்து கோடியே 53 லட்சத்து 50 ஆயிரத்து 663 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 32 ஆயிரத்து 338ஆக உயர்ந்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 441 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் ஐந்து லட்சத்து 13 ஆயிரத்து 798 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.