தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலகளவில் 12 லட்சத்தை தாண்டிய கரோனா உயிரிழப்புகள்!

உலகளவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்து 405ஆக அதிகரித்துள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Nov 1, 2020, 2:28 PM IST

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகிறது. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலகளவில் 4 கோடியே 63 லட்சத்து 94 ஆயிரத்து 211 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 405ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 87 ஆயிரத்து 910 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்து 95 ஆயிரத்து 621 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகப்பட்சமாக அமெரிக்காவில்தான் 94 ஆயிரம் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details