உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகள் திணறிவருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
உலகளவில் 3 கோடியே 56 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு!
உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 56 லட்சத்து 98 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது.
ரோனு
இதுவரை உலகளவில் 3 கோடியே 56 லட்சத்து 98 ஆயிரத்து 655 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 45 ஆயிரத்து 953ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 68 லட்சத்து 67 ஆயிரத்து 153 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்து ஆயிரத்து 335 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.