தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலக அளவில் 3 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு! - உலகளவில் கொரோனா பாதிப்பு

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு கோடியே 97 லட்சத்து 17 ஆயிரத்து 40ஆக அதிகரித்துள்ளது

கரோனா
கரோனா

By

Published : Sep 16, 2020, 12:42 PM IST

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலக அளவில் இரண்டு கோடியே 97 லட்சத்து 17 ஆயிரத்து 40 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 38 ஆயிரத்து 447ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 15 லட்சத்து 30 ஆயிரத்து 783ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவிலான கரோனா நிலவரம்

நேற்று (செப்.15) ஒரே நாளில் மட்டும் இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 856 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இந்தியாவில் தான் 91 ஆயிரம் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேபோல், அமெரிக்காவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், உலக அளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details