உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகிறது. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
உலகளவில் 2 கோடியே 56 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு!
உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 34 ஆயிரத்து 102ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை உலகளவில் 2 கோடியே 56 லட்சத்து 34 ஆயிரத்து 102 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 54 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 79 லட்சத்து 39 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 49 ஆயிரத்து 279 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.