உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 16 லட்சத்து 17 ஆயிரத்து 761ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 69 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில், 55 லட்சத்து 29 ஆயிரத்து 789 மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் மட்டும் உயிரிழப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பிரேசிலில் 33 லட்சத்து 17 ஆயிரத்து 832 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
தொற்று அதிவிரைவாக பரவி கொண்டு இருக்கும் இந்தியாவில் கிட்டதட்ட தினசரி 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. இதுவரை 25 லட்சத்து 90 ஆயிரத்து 501 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழந்திருக்கின்றனர். கரோனா பரவல் அதிகரித்துவரும் தென் கொரியா நாட்டில் கடந்த மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் தற்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பரவி உள்ளது.
உலகயளவில் கரோனா தொற்று 2 கோடிக்கும் அதிகமனோர் பாதிப்பு! இதையும் படிங்க:ட்ரம்பின் இளைய சகோதரர் காலமானார்!