தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 13, 2020, 1:06 PM IST

ETV Bharat / international

உலகளவில் 7 லட்சத்து 51 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழப்பு!

உலகளவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 51 ஆயிரத்து 550ஆக அதிகரித்துள்ளது.

கரோனா
கரோனா

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. இதுவரை உலகளவில் இரண்டு கோடியே எட்டு லட்சத்து ஆறு ஆயிரத்து 939 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 51 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 36 லட்சத்து 82 ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நேற்று (ஆக.12) ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 84 ஆயிரத்து 748 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details