தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 9, 2020, 4:54 PM IST

ETV Bharat / international

உலகளவில் 2 கோடியை நெருங்கும் கரோனா!

உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது.

கரோனா
கரோனா

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல், பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றனர். வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலகளவில் 1 கோடியே 98 லட்சத்து 7 ஆயிரத்து 605 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 29 ஆயிரத்து 613ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 27 லட்சத்து 24 ஆயிரத்து 299ஆக உயர்ந்துள்ளது.

நேற்று(ஆகஸ்ட் 8) ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 857 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details