தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மாணவர்களின் நலனை கரோனா வைரஸ் பாதிக்கிறது - ஐ.நா - 160க்கும் மேற்பட்ட நாடுகள் பள்ளிகளை மூடியுள்ளன

ஹைதராபாத்: உலகெங்கிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் பில்லியனுக்கும் அதிகமான மாணவர்களின் நலனை பாதிப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

global-covid-19-tracker
global-covid-19-tracker

By

Published : Aug 4, 2020, 8:11 PM IST

உலகெங்கிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்து 47 ஆயிரத்து 759க்கும் மேலாக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 97 ஆயிரத்து 245 பேருக்கு மேலாகவும், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே, 16 லட்சத்து 80 ஆயிரத்து 369க்கும் மேலாகவும் உள்ளது.

இந்நிலையில், ஐந்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்ரெஸ், கரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்த இந்த ஆண்டின் நடுப்பகுதியில் 160க்கும் மேற்பட்ட நாடுகள் பள்ளிகளை மூடியுள்ளன. இதனால் பில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் வரலாற்றில் மிகப்பெரிய கல்வி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த கல்வியாண்டில் குறைந்தது 40 மில்லியன் மாணவர்கள் தங்களது கல்வியை தவறவிட்டுள்ளனர். இதன் விளைவாக. ஒரு தலைமுறையே பேரழிவை எதிர்கொள்கிறது. மனித ஆற்றல் வைரஸ் தொற்று வீணடித்து வருகிறது. பல நாடுகளின் முன்னேற்றத்தை பாதிப்படையச் செய்துள்ளது.

மாணவர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் சில முடிவுகளை எடுக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம். அரசாங்கங்களும் பள்ளிகளும் தற்போது எடுக்கும் முடிவுகள் நூற்றுக்கணக்கான மில்லியன் இளைஞர்கள், மாணவர்கள் நாடுகளின் வளர்ச்சி வாய்ப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வைரஸின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details