உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 77 லட்சத்து 66 ஆயிரத்து 840 ஆக உள்ளது.
கரோனாவால் ஆறு லட்சத்து 83 ஆயிரத்து 218 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 11 லட்சத்து 66 ஆயிரத்து 333 ஆக உள்ளது.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பை கடந்த நாடாக நியூசிலாந்து அறியப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தானிலிருந்து துபாய் வழியாக நியூசிலாந்து வந்த இரண்டு பெண்களுக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை இதையடுத்து அவர்கள் இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் நியூசிலாந்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனை சிகிச்சையில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை என அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு விரைவில் தடை - ட்ரம்ப் தகவல்