2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை முடக்கிப்போட்டுள்ளது. கரோனா பாதிப்பும், அதன் பலியும் கட்டுப்படுத்த முடியாத வகையில், அதிகரித்து வருவதால் உலக மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலகளவில் கரேனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 39லட்சத்து 30ஆயிரத்து 157ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 865ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 82 லட்சத்து 65 ஆயிரத்து 571 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் மிக விரைவில் கட்டுப்படுத்தப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் மெல்போர்னில் முன்று பேர் உயிரிழந்தனர். விக்டோரியா மாகாணத்தில் ஒரே நாளில் மட்டும் 428 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 11ஆயிரத்து 233ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 116 பேர் உயிரிழந்தனர். 8ஆயிரத்து 114 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சிட்னி பல்கலைக்கழகம் தீவிரம் காட்டி வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க மெல்போர்ன் மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனுமதியின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.