உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகள் திணறிவருகின்றன. மருந்து கண்டுபிடிக்காததால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
உலகளவில் கரோனாவிலிருந்து சுமார் 66 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்! - உலகளவில் கொரோனா பாதிப்பு
உலகளவில் கரோனா வைரசிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 25 ஆயிரத்து 132ஆக உயர்ந்துள்ளது.

கரோனா
உலகளவில் இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரத்து 474 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 40 ஆயிரத்து 136ஆக அதிகரித்துள்ளது. வைரசிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 25 ஆயிரத்து 132ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 82 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.