உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறிவருகின்றன. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், கரோனா தாக்கம் குறையாமல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உலகளவில் கரோனாவால் சுமார் 73 லட்சம் பேர் பாதிப்பு!
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 லட்சத்து 11 ஆயிரத்து 660ஆக உயர்ந்துள்ளது.
covid
இதுவரை உலகளவில் 74 லட்சத்து 11 ஆயிரத்து 660 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 12 ஆயிரத்து 997ஆக அதிகரித்துள்ளது. வைரசிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 96 ஆயிரத்து 692ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 21 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.