வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள பெய்டஸ் சாலத் ஜமே மசூதி அருகே பெரும் விபத்து ஏற்பட்டத்து. வெள்ளிக்கிழமை இரவு தொழுகை முடித்துவிட்டு பலர் வீடு திரும்புகையில், அப்பகுதியில் உள்ள கேஸ் பைப் வெடித்து விபத்துக்குள்ளானது.
வங்கதேசத்தில் கேஸ் பைப் வெடித்ததில் 11 பேர் உயிரிழப்பு - வங்கதேசம் வெடி விபத்து
டாக்கா: வங்கதேசத்தில் மசூதி அருகே கேஸ் பைப் வெடித்து விபத்துக்குளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
pipeline blast
இந்த விபத்தில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 37க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று காவல்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்திற்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்றுவருவதாகவும் காவல்துறை தரப்பு கூறியுள்ளது.
இதையும் படிங்க:மீண்டும் சீனா அத்துமீறல்! ஐந்து இந்தியர்களைப் பிடித்துச் சென்ற சீன ராணுவம்