வங்க தேசம், டாக்காவின் பைதுல் சலாத் பகுதில் அமைந்துள்ள பைட்டஸ் சலா ஜேம் மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.04) இரவு ஒன்பது மணியளவில் இஸ்லாமிய மக்கள் தொழுகைக்காக கூடியிருந்த சமயத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
வங்கதேச மசூதி வெடிவிபத்து : பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு! - மசூதி வெடிவிபத்து: உயிரிழப்பு 21ஆக உயர்வு!
டாக்கா : வங்கதேசத்தில் பைட்டஸ் சலா ஜேம் மசூதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.
ang
இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் டாக்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து, சமையல் எரிவாயு குழாய் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக குளிரூட்டும் சாதனங்கள் வெடித்ததில் ஏற்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.