தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கடலில் கலக்கப்படும் புகுஷிமா கதிரியக்க நீர் - உலக நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து

2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்கை பேரழிவினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையில் உள்ள கதிரியக்க நீரை கடலில் சுரங்கப்பாதை அமைத்து வெளியேற்ற ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது.

கடலில் கலக்கப்படும் புகுஷிமா கதிரியக்க நீர்
கடலில் கலக்கப்படும் புகுஷிமா கதிரியக்க நீர்

By

Published : Aug 30, 2021, 2:09 AM IST

டோக்கியோ (ஜப்பான்): சுனாமி பாதிப்புக்குள்ளான புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக, கரையில் இருந்து மீனவர்களை பாதிக்காத வண்ணம், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. அந்த சுரங்கப்பாதையில் கதிரியக்கம் கொண்ட நீர் சேமிக்கப்படவுள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு உலக நாடுகளைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர்களும், மீனவ மக்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

புகுஷிமா விபத்து

ஜப்பான் நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியின் காரணமாக புகுஷிமா அணு மின் நிலையம் பாதிப்புக்குள்ளானது.

அணுமின் நிலைய உலைகளை குளிரூட்டும் அமைப்பு அதில் பாதிக்கப்பட்டதால் அதிகளவிலான வெப்பம் வெளியாகி உலைகள் சேதமடைந்தன. தொடர்ந்து உலைகளை குளிரூட்ட இருந்த நீரில் கதிர்வீச்சு கலந்து அது கடலிலும் கசியத் தொடங்கியது.

கடலில் கதிர்வீச்சு கலந்த நீர் கலக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அதற்காக பெரிய அளவிலான தொட்டிகளை கட்டி அதில் அந்த நீரை ஜப்பான் சேமித்து வைத்தது.

கடலில் கலக்க திட்டம்

இந்நிலையில் தற்போது அதைச் சுத்திகரித்து பசிபிக் பெருங்கடலில் கலக்க திட்டமிட்டுள்ளது ஜப்பான் அரசு. அதற்கு அந்நாட்டு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழவே, தற்போது சுரங்கப்பாதை அமைக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் அணு உலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பரவும் புகுஷிமா கதிர்வீச்சு

இதற்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விளையும் திராட்சைகளில் புகுஷிமாவின் கதிர்வீச்சு கண்டறியப்பட்டுள்ளது. இப்படி கதிர்வீச்சானது பல்வேறு இடங்களுக்குப் பரவுகிறது. இன்னும் நிறைய இடங்களுக்குக் கதிர்வீச்சு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details