பாகிஸ்தான் நாட்டின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மன்சேரா மாவட்டத்தில், நான்கு பேருடன் சென்ற வாகனம் பனிச்சரிவில் சிக்கி புதைக்கப்பட்டது. அதன் காரணமாக வாகனத்திலிருந்த 4 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த உள்ளூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினரின் முதல்கட்ட தகவலில் நேற்றிரவே விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என்பது தெரியவந்துள்ளது.