தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் காலமானார்! - பிரதமர் மிர் ஜாபருல்லா கான் ஜமாலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மிர் ஜாபருல்லா கான் ஜமாலி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (டிச. 02) காலமானார்.

ஜாபருல்லா ஜமாலி
ஜாபருல்லா ஜமாலி

By

Published : Dec 3, 2020, 7:01 AM IST

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மிர் ஜாபருல்லா கான் ஜமாலி உடல்நலக்குறைவு காரணமாக, ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

ஆனால், கடந்த சில நாள்களாக அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில் நேற்று (டிச. 02) அவர் காலமானார். அவரது மறைவிற்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அத்துடன் தற்போதைய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். ஜாபருல்லா பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக 2002ஆம் ஆண்டுமுதல் 2004 வரை பதவியிலிருந்தார். அவருக்கு வயது 76.

இதையும் படிங்க:மேலும் மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details