கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவில் உணவு தட்டுப்பாடு குறித்து அந்நாட்டு ஐநா கள ஆய்வு மேற்கொண்டது.
வடகொரியாவில் கடும் உணவு தட்டுப்பாடு! - korea food crisis
பியாங்யாங்: வறட்சி காரணமாக வடகொரியாவில் கடும் உணவு தட்டுப்பாடு நிலவி வருவதாக ஐநா ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அதுகுறித்த ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், வெள்ளம், வெப்ப அலைகள் உள்ளிட்ட காரணங்களால் வடகொரியாவில் வறட்சி ஏற்பட்டு கடும் உணவு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் காரணமாக 100 மில்லியன் கொரியர்கள் போதிய உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
"அரசு சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் உணவுகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ள ஐநா, உணவு தட்டுப்பாட்டிலிருந்து தவிர்க்க விவசாய முறைகளை மேம்படுத்த வேண்டும் என வடகொரியாவை அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, 90களில் வடகொரியாவில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக 3 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.