தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் - 5 பேர் பலி! - gunmen

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலோச்  பிரிவினைவாத அமைப்பினர்

By

Published : May 10, 2019, 5:36 PM IST

தென்மேற்கு பாகிஸ்தானின் ஹர்னாய் மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த சுரங்கத்தில் பலோச் பிரிவினைவாதிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, வெடிகுண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். இந்த தாக்குதல்களில் இரண்டு சுரங்கத் தொழிலாளர்கள், இரண்டு பாதுகாவலர்கள், ஒரு ஓட்டுநர் என மொத்தம் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இச்சம்பவத்தில் பாதுகாவலர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ள பலோச் பிரிவினைவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர், " உள்ளூர் உளவாளிகள், பாகிஸ்தான் ராணுவம் ஆகியவை தொடர்ந்து செய்த துரோக குற்றங்கள் என்றைக்கும் மறந்து போகாது " என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details