தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தான் விமானப் படையில் முதல்முறையாக ஒரு இந்து பைலட்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் விமானப் படையில் முதல்முறையாக இந்து மதத்தைச் சேர்ந்த ராகுல் தேவ் என்ற இளைஞர் விமான ஓட்டுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

pak
pak

By

Published : May 7, 2020, 1:07 AM IST

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள தர்பார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் தேவ். இவர் தற்போது பாகிஸ்தான் விமானப் படையில் ஜெனரல் ட்யூட்டி விமான ஓட்டியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் விமானப் படையில், இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது, இதுவே முதல்முறையாகும்.

பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தவர், மதத் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக சமீப காலமாக செய்திகள் எழுந்த நிலையில், ராகுல் தேவ் விமானப் படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது மனதுக்கு ஆறுதலாக இருப்பதாக அனைத்து பாகிஸ்தான் பஞ்சாயத்து அமைப்பின் செயலர் ரவி தால்வானி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2018ஆம் ஆண்டு மகேஷ் குமார் மலானி என்பவர், பாகிஸ்தான் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்து என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

இதையும் படிங்க : நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details