சீனாவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கணை வாங் யாப்பிங், மற்றொரு விண்வெளி வீரர் ஷாய் ஷிகாங் என்பவருடன் சர்வதேச விண்வெளி மையத்தில் நடந்து ஆய்வு செய்தார். இதன் மூலம் விண்வெளியில் நடந்த (Space Walk) முதல் சீனப் பெண்மணி என்ற பெருமையை வாங் யாப்பிங் பெற்றுள்ளார்.
இருவரும் சுமார் ஆறு மணிநேரம் நடந்துள்ளதாகவும், விண்வெளி வீரர்கள் குழுவுக்கும் விண்வெளி மையத்திற்கு சிறப்பான தகவல் தொடர்பு இருப்பதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.