ரஷ்யா - உக்ரைன் போர் தற்போது தீவிரமடைந்துள்ளதால், இந்திய மாணவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக தாயகம் அழைத்துவருவதற்கான முயற்சிகளை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுவருகிறது.
இதில் ரஷ்யாவின் தாக்குதல் பெரும்பாலும் கிழக்கு உக்ரைனில் நோக்கி இருப்பதால், உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள லிவிவ், செர்னிவ்ஸ்டி ஆகிய நகரங்களில், இந்தியர்களை மீட்பதற்கான முகாம் அலுவலகங்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திறந்திருக்கிறது.
சில மாணவர்கள் நில எல்லை வழியே உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கின்றனர். அந்த வகையில் உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானங்களை இந்தியா அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.