தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தென்கொரியாவில் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து - தென்கொரியாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

சியோல்: தென்கொரியாவின் உல்சன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

Fire in South Korean apartment
Fire in South Korean apartment

By

Published : Oct 9, 2020, 1:21 PM IST

தென்கொரியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று உல்சன். இங்குள்ள 33 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் கட்டடத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்டனர். அதேபோல் சிலர் தீ விபத்து காரணமாக மொட்டை மாடிக்கு சென்றனர். துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களையும் விரைவில் மீட்டனர்.

இந்த விபத்து காரணமாக எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தீ விபத்தில் சிறு காயம் அடைந்த 88 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தென்கொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details