தலைநகர் டாக்காவில் எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் சவுக் பஜார் எனும் சந்தையில், பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 71 பேர் பரிதாபமாக பலியாகினர். அங்குள்ள கட்டடத்தில் செயல்பட்டுவந்த ரசாயன ஆலையில் திடீரென ஏற்பட்ட கசிவு காரணமாகவே தீ விபத்து நிகழ்ந்தது என தெரியவந்தது.
ரம்ஜானையொட்டி களைகட்டும் விற்பனை - தீ விபத்தை நினைவுகூறும் மக்கள்! - busy
டாக்கா: வங்க தேசத்தில் அண்மையில் நிகழ்ந்த தீ விபத்தை நினைவுகூறும் மக்கள், பெரும் பீதிகளுக்கிடையே ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகைக்காக இனிப்பு கார பலகாரங்களை வாங்கிச் செல்கின்றனர்.
களைக்கட்டிய விற்பனை
இந்நிலையில், ஈகை திருநாளான ராம்ஜான் பண்டிகை வரும் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது, நோன்பு நடைபெற்று வருவதால் இஸ்லாமியர்கள் பலரும் இந்தச் சந்தையில் பழங்கள், பலகாரங்கள், நொறுக்குத் தீனிகள் உள்ளிட்டவைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இத்தகைய சூழலில், பிப்ரவரி மாதம் நடைபெற்ற தீ விபத்தை அங்குள்ள மக்களும், வியாபாரிகளும் நினைவுகூர்ந்து வருகின்றனர். எனினும், ஈகைத் திருநாளை உற்சாகமாக கொண்டாட மக்கள் ஆர்வமுடன் உணவுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.