இந்தியப் பெருங்கடலில் உருவான ஃபோனி புயல் ஆந்திராவின் சில கடலோரப் பகுதிகளையும், ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர், புரி உள்ளிட்ட நகரங்களையும் புரட்டிப் போட்டது. இதில் ஒடிசாவில் முக்கிய ரயில் நிலையங்கள், செல்போன் கோபுரங்கள், மின் கோபுரங்கள் உள்ளிட்டவை பெரும் சேதத்திற்கு உள்ளாகின.
ஃபோனி புயலால் வங்கதேசத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு! - flood
டாக்கா: ஒடிசாவை புரட்டிபோட்டுள்ள ஃபோனி புயலால் அடுத்த ஆறு முதல் எட்டு மணி நேரத்திற்கு வங்கதேசத்தில் பலத்த மழை பொழிவு ஏற்படும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கதேத்தை சின்னாபின்னமாக்கிய ஃபோனி புயலில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மரங்கள் முரிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 ஆயிரம் வீடுகள் பெத்த தேசத்தை சந்தித்துள்ளன. இந்த ஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் 3, 800 மெட்ரிக் டன் அரிசியும், 41 ஆயிரம் உணவு பொட்டளங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தை புரட்டிபோட்டுள்ள ஃபோனி புயலால் அடுத்த ஆறு முதல் எட்டு மணி நேரத்திற்கு வங்கதேசத்தில் பலத்த மழை பொழிவு ஏற்படும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது.