தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மனிதனின் காதுக்குள் குடும்பமாக வாழ்ந்த கரப்பான் பூச்சிகள்! - china cockroaches lived inside man ear

சீனா: மனிதனின் காதுக்குள் 10க்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் குடும்பமாக வசித்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரப்பான பூச்சிகள்

By

Published : Nov 7, 2019, 7:36 PM IST

சீன நாட்டின் ஹுய்சோ(Huizhou) பகுதியில் வசித்து வருபவர் எல்வி (Lv). இவர் திடீரென்று காது வலியின் காரணமாகத் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். உடனடியாக தனது வீட்டில் வசிக்கும் நபர்களைக் காதில் டார்ச் லைட் அடித்துப் பார்க்கச் சொல்லிருக்கிறார். அப்போது எல்வியின் காதில் பெரிய கரப்பான் பூச்சி ஒன்று இருந்துள்ளதைப் பார்த்து, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு எல்வியை அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகப் பெரிய அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவரது காதுக்குள் 10 கரப்பான் பூச்சிகள் இருந்துள்ளன.

இதுகுறித்து மருத்துவர் ஜோங் யிஜின் ( Zhong Yijin) கூறுகையில்,"அவரது காதுக்குள் ஏதோ ஓடுகிறது என வலியில் துடித்தார். பரிசோதித்த பிறகு தான் காதுக்குள் 10 கரப்பான் பூச்சிகள் ஓடிக்கொண்டிருந்ததை அறிந்துள்ளார். அதன் பின், மருத்துவச் சிகிச்சை மூலமாக கரப்பான் பூச்சிகள் அகற்றப்பட்டுள்ளன. எத்தனை நாட்களாக காதுக்குள் கரப்பான் பூச்சிகள் இருந்துள்ளன என்பது சரியாகத் தெரியவில்லை" எனக் கூறினார்.

ஒரு மனிதனின் காதுக்குள் கரப்பான் பூச்சி குடும்பம் நடத்தி வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கழுகு தூக்கி வந்து கீழே போட்ட உயிரினம் - வளர்த்த பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details