தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

லாகூரில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; நால்வர் காயம்! - pakitan explosion 1 killed

இஸ்லாமாபாத்: லாகூர் நகரில் மசூதி அருகே நேற்று மாலை நடந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

pakistan explosion,  பாகிஸ்தான் வெடிவிபத்து
pakistan explosion

By

Published : Dec 8, 2019, 1:49 PM IST

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரில் உள்ள மசூதி அருகே நேற்று மாலை மத கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்குள்ள குளிர் சாதனப் பெட்டி பழுது பார்க்கும் கடையில் வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர். இஜாஸ் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அரசு அலுவலர்கள், சனிக்கிழமை மாலை தடைசெய்யப்பட்ட ஜமத் உத் தல்வா அமைப்புக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் மசூதி அருகே இந்த விபத்து நடைபெற்றதாகக் கூறினர்.

இதையும் படிங்க: டெல்லியில் பயங்கர தீ விபத்து: 43 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details