திபெத் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் இறுதிச்சுற்று இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று(ஏப்ரல்.11) நடைபெற்றது.
இந்த வாக்குப்பதிவில், தர்மசாலாவில் வசிக்கும் ஏராளமான திபெத்தியர்கள் உற்சாகமாக வாக்களித்தனர். உலகம் முழுவதும் உள்ள 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
திபெத் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றவது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியாகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான லோப்சாங் க்யாட்சோ சிதர், அரசியலில் பங்காற்ற வருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதையும் படிங்க:ஏப்ரல் 17ஆம் தேதி இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு