இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் நீதிபதி அர்ஷத் மாலிக் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார்.
நீதிபதி அர்ஷத் மாலிக் மரணத்தை அவரது மைத்துனன் வாஷித் ஜாவத் உறுதிப்படுத்தியுள்ளார். அர்ஷத் மாலிக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று காலமானார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அல் ஜஸீரா ஸ்டீல் மில்ஸ் வழக்கில் 2018ஆம் ஆண்டு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார்.