துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், அந்நாட்டு அதிபர் எர்டோகன் கலந்து கொண்டார். அப்போது அவர், "இட்லிப் பகுதியிலிருந்து 80,000 சகோதரர்கள் நம் நாட்டின் எல்லையோர பகுதிகளை நோக்கி வர தொடங்கியுள்ளனர். இதுபோன்ற சூழலில், அவர்களின் சுமையை துருக்கி மட்டும் ஏற்காது.
இட்லிப் பகுதியில் நடக்கும் தாக்குதல்களை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்த மாஸ்கோவிற்கு ஒரு குழு செல்லவுள்ளது. இதன் முடிவுகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.