எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் உலகின் தலைசிறந்த விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாகும். 340 கிமீ தொலைவே உள்ள துபாய் - மஸ்கட் இடையே விமான போக்குவரத்தைத் தொடங்கி வைத்து குறுகிய நேரம் பயணிக்கும் A380 விமானத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மிகக் குறுகிய நேரம் பயணிக்கும் விமானம்! - விமானம்
அபு தாபி: துபாய் - மஸ்கட் இடையே விமான போக்குவரத்தை தொடங்கி வைத்து மிகக் குறுகிய நேரம் பயணிக்கும் விமானம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் A380 விமானம்.
விமானம்
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் விமானத்தை சுத்தம் செய்ய 35 நிமிடங்கள் வேண்டும். ஆனால் இனி 40 நிமிடங்களில் உங்கள் பயண இலக்கை அடையலாம்" என பதிவு செய்துள்ளது. முன்னதாக துபாய் - தோஹா இடையே பயணப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம்தான் மிகக் குறுகிய நேரத்தில் பயணப்பட்ட விமானம் என்ற சிறப்பை பெற்றிருந்தது. இரு நாடுகளுக்கிடையே பிரச்னை தொடர்ந்ததால் துபாய் - தோஹா இடையே விமான சேவைகள் முடக்கப்பட்டது.