எவெரஸ்டில் வசந்த காலம் ஆரம்பிக்கவுள்ளதால் மலையேறுவதற்காக அதிகளவில் மக்கள் உலகெங்கிலும் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் பணிகளை துரிதப்படுத்துகிறது திபெத் அரசாங்கம்.
எவரெஸ்டில் கழிவறைகள் அமைத்து தரும் சீனா
பெய்ஜிங்: எவரெஸ்டில் மலையேறும் சீசன் தொடங்கவுள்ள நிலையில் மலையேறுபவர்களின் வசதிக்காக கேம்ப்களில் கழிவறைகள் கட்டத் தரப்படும் என சீனா அறிவித்துள்ளது.
எவெரஸ்டின் சுற்றுச்சூழல் கருதி கடல் மட்டத்திலிருந்து 7028 மீட்டர் உயரத்தில் கழிவறைகளை அமைத்து தருவதற்கு சீனாவைச் சேர்ந்த ஒரு சுற்றுலா நிறுவனம் முன்வந்துள்ளது. இதுகுறித்து திபெத் மலையேறுபவர்களின் சங்த்தின் துணை பொதுச் செயலாளர் பெமா டின்லே கூறுகையில், பெரல்களுடன் பைகள் இணைக்கப்பட்டிருக்கும். இது கழிவுகளை எளிதில் அகற்றப் பயன்படும்.
7500 மீட்டருக்கு மேலே மலையேறுபவர்கள் குறைவாகவே உணவுகள் உட்கொள்வதால், குப்பைகள் தங்க வாய்ப்பில்லை. ஆனால் இதற்கு கீழே குப்பைகள் அதிகம் சேரக்கூடும் என்பதால் 6500 மீட்டர், 5800 மீட்டர், 5200 மீட்டர்களில் கழிவறைகளும் அமைக்கப்படவுள்ளன” என்றார்.