தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆரம்பகால செவ்வாய்க்கிரகம் பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தது - ஆய்வில் தகவல்! - ஆர்ம்பகால செவ்வாய் கிரகம்

கனடா: ஆரம்பகால செவ்வாய்க்கிரகம் முற்றிலுமாக பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தது என்றும், அதற்கு கீழே பள்ளத்தாக்குகள் இருந்தன எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

செவ்வாய்
செவ்வாய்

By

Published : Aug 5, 2020, 10:04 PM IST

முன்னணி எழுத்தாளரும், பூமி, கடல் மற்றும் வளிமண்டல அறிவியல் துறையில் பிஎச்டி பட்டம் பெற்ற அன்னா கிராவ் கலோஃப்ரே, சக ஆசிரியர்களுடன் இணைந்து செவ்வாய்க்கிரகம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில், செவ்வாய்க்கிரகத்தில் பள்ளத்தாக்குகள் கண்டுபிடித்த நாளிற்கு முன்னரே ஆறுகள் அங்கு பாய்ந்ததாகவும், அவை வற்றி பள்ளத்தாக்குகள் உருவானதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் நூற்றுக்கணக்கான பள்ளத்தாக்குகள் உள்ளன, அவை ஒன்றுக்கு ஒன்று மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன.செயற்கைகோள் வழியாக பூமியை பார்த்தாலும், நிறைய பள்ளத்தாக்குகளை காணமுடியும். சிலது ஆறுகளால் உருவானவை, சிலது பனிப்பாறைகளால் உருவாக்கப்பட்டவை, மற்றவை செயல்முறைகளால் உருவானவை.

ஒவ்வொரு வகைக்கும் ஒரு தனித்துவமான வடிவம் உள்ளது. அதே போல் தான் செவ்வாய்க்கிரகம் பள்ளத்தாக்கும் உள்ளது. பூமியில் செவ்வாய்க்கிரகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு அனலாக்ஸில் டெவோன் தீவு தான். அதில் தான் குளிர், வறண்ட, துருவ பாலைவனம், பனிப்பாறை என எல்லாம் இருக்கும். எனவே, செவ்வாய்க்கிரகமும் முதலில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தது.

இந்தப் பனிக்கட்டிகள் கீழ் தான் ஆறுகள் பாய்ந்து கொண்டிருந்தன" எனக் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து பேசிய ஜெல்லினெக், "கிராவ் கலோஃப்ரேயின் ஆராய்ச்சி செவ்வாய்க்கிரகத்தை குறித்து இருந்தாலும், நமது பூமியின் ஆரம்பகால வரலாற்றைப் பற்றி மேலும் அறிய உதவியாக இருக்கும். வரலாற்றில் எஞ்சியிருக்கும் சில அம்சங்களை பகுப்பாய்வு செய்ய மற்றும் ஆராய இந்த புதிய வழிமுறைகளைப் பயன்படுத்த முடியும்.

ஒரு மில்லியன் முதல் ஐந்து மில்லியன் ஆண்டுகள் முன்பிருந்த பனிப்பாறை வரலாற்றை தற்போது பூமியில் மீண்டும் கொண்டு வர முடியும். அண்டார்டிகாவின் ஆரம்பம் வரை அல்லது அதற்கு முந்தைய காலங்களில் பனிப்படலங்களின் முன்னேற்றத்தையும் பின்வாங்கலையும் ஆராய்வதற்கு இந்த பகுப்பாய்வு கருவிகள் நிச்சயம் உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details