தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கழுகு தூக்கி வந்து கீழே போட்ட உயிரினம் - வளர்த்த பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி! - Australia rare breed dingo found

ஆஸ்திரேலியா: கழுகு தனது தோட்டத்தில் தூக்கி வந்து போட்ட உயிரினத்தை நாய் என நினைத்து வளர்த்த பெண்ணுக்குப் பரிசோதனையில் கிடைத்த தகவல் அதிர்ச்சி அளித்தது.

டிங்கோ

By

Published : Nov 4, 2019, 11:41 PM IST

ஆஸ்திரேலியாவில் வடகிழக்கு மெல்பெர்ன் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் வீட்டின் தோட்டத்தில் விலங்கின் சத்தம் கேட்டுள்ளது. இச்சத்தத்தைக் கேட்டு வெளியே சென்ற பார்த்த பெண் ஆச்சரியம் அடைந்தாள். தோட்டத்தில் குட்டி நாய்க்குட்டி மாதிரி விலங்கு ஒன்று அடிபட்ட நிலையிலிருந்துள்ளது. வானத்தில் பறந்து கொண்டிருந்த கழுகைப் பார்த்தபிறகு தான் புரிந்துள்ளது. கழுகு தான் அந்த உயிரினத்தைத் தூக்கி வந்து தோட்டத்தில் போட்டுள்ளது என்று. பின்னர் அந்த உயிரினத்திற்கு மருத்துவச் சிகிச்சையளித்து தனது செல்ல பிராணியாக வளர்த்துள்ளார்.

பின்னர் குட்டி உயிரினத்தின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து," இது நாயா அல்லது நரியா என்று தெரியவில்லை' என சமூக வலைத் தளவாசிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். பின்பு அந்த செல்லப்பிராணிக்கு வெண்டி (Wandi) எனப் பெயர் வைத்து, ஆல்பைன் விலங்கு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

டிங்கோ

செல்லப்பிராணிக்கு டிஎன்ஏ சோதனை நடத்திய மருத்துவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதில், இந்த உயிரினம் ஆஸ்திரேலியாவின் அரிய வகை விலங்கான விக்டோரியா ஹைலேண்ட்ஸ் டிங்கோ (Dingo - காட்டு நாய்) எனக் கண்டுபிடித்தனர்.

மேலும் அவர்கள், கழுகு இதனை அதன் கூட்டத்திலிருந்து தூக்கி வந்து கீழே போட்டதில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர். தற்போது டிங்கோ உயிரினத்தை ஆஸ்திரேலியா டிங்கோ அறக்கட்டளையின் சரணாலயத்தில் வைத்துப் பராமரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நாய்க்கு டை அடித்து பாண்டாவாக மாற்றிய உரிமையாளர்!

ABOUT THE AUTHOR

...view details