தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நாய்க்கு டை அடித்து பாண்டாவாக மாற்றிய உரிமையாளர்!

பெய்ஜிங்: வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு நாய்க்கு டை அடித்து பாண்டாவாக மாற்றியுள்ள உணவு விடுதி உரிமையாளர்.

பாண்டா

By

Published : Oct 25, 2019, 4:02 AM IST

சீனாவில் உள்ள ஷிங்ட் (chengdu) பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது தீ க்யூட் பெட் கேம்ஸ் கபே (The Cute Pet Games café) உணவு விடுதி. இதன் உரிமையாளர், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு சொந்தமான ஆறு செள செள நாய்களுக்கு (Chow chow dogs) டை அடித்து சீனாவின் தேசிய விலங்கான பாண்டா கரடிகள் போல் மாற்றி உணவகத்தில் ஓடியாட விட்டுள்ளார்.

பாண்டாவாக மாறியுள்ள செள செள நாய்

பாண்டா கரடிகளைப் பார்க்கும் விதமாக வாடிக்கையாளர்களின் வருகை உணவகத்தில் அதிகரித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுடன் செல்ல பிராணிகளை அழைத்து வந்து பிரத்தியேக டையை இலவசமாகப் பிராணிகளுக்கு அடித்துக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.

செள செள நாய்

இதற்கு விலங்கியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கண்டனம் உருவாகியுள்ளது. ரசாயன டை அடிப்பதன் மூலம் நாய்களுக்கு நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என பலதரப்பு மக்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்

இதற்கு பதிலளிக்கும் விதமாக உணவுவிடுதி உரிமையாளர், "நாய்களுக்கு அடிக்கப்பட்டுள்ள டை பிரத்தியேகமாக ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகவும் விலையுயர்ந்தது. இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details