தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நான் இருக்கிறேன் கவலைப்படாதீங்க... நாய்களுக்கு கைகொடுத்த தாய்லாந்து அரசர்! - 15நாய்கள்

பாங்காக்: உணவின்றி உயிர்போகும் நிலையில் எழும்பு தோளாக இருக்கும் 15 நாய்களை தாய்லாந்து அரசர் தத்தெடுக்க முன்வந்துள்ளார்.

கோப்பு படம்

By

Published : Aug 21, 2019, 7:04 PM IST


தாய்லாந்து நாட்டில் பதும் என்ற இடத்தில் நாய்களுக்கான காப்பகம் உள்ளது. அதன் உரிமையாளர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிதி பிரச்னை காரணமாக தலைமறைவானார். இதையடுத்து கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த நாய்கள், பல வாரங்களாக உணவின்றி தவித்து வந்தன. ஊட்டச்சத்து குறைபாட்டினாலும், பசியாலும் அவதிப்பட்டு வந்தது குறித்து அக்கம்பக்கத்தினர் அரசு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாய்களில் பெண் நாய் ஒன்றும், இரண்டு குட்டிகளும் பசியால் உயிரிழந்தன. இகுறித்து வீடியோ வெளியான நிலையில், அந்நாட்டு மன்னர் பத்தாம் ராமா 15 நாய்களையும், மீட்டு வளர்ப்பதற்கான அனைத்து செலவுகளையும் தனது குடும்பமே ஏற்பதாக அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details