இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் எனக்கோரி, அந்நாட்டின் 11 எதிர்க்கட்சிகள் இணைந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (PDM) என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த இயக்கம் சார்பில் நாடெங்கிலும் அவ்வபோது போராட்டமும், பேரணியும் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில், வரும் டிசம்பர் 13ஆம் தேதி லாகூர் நகரில் பேரணி நடத்த பிடிஎம் முடிவு செய்திருந்தது. இதனிடையே அந்நாட்டில் கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை தொடங்கியுள்ள நிலையில், போராட்டம், பேரணி போன்றவைகளை நடத்தக் கூடாது என அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
இதையடுத்து, திட்டமிட்டபடி லாகூரில் பேரணி நடைபெறும் என பிடிஎம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் குவாமர் ஷாமன் கைரா கூறுகையில், " தங்களது பேரணியை தடுத்து நிறுத்துவதற்காக பாகிஸ்தான் அரசு புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது. திட்டமிட்டபடி லாகூர் பேரணி நடைபெறும். அதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்றுவருகுன்றன." என்றார்.
முன்னதாக, கரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் எனக்கூறி பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் பேரணிக்கு அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இந்நிலையில் பேரணி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக, அக்டோபர் 16, 19,25, நவம்பர் 22 ஆகிய தேதிகளில் பிடிஎம்-ன் பேரணிகள் நடைபெற்றன.
இதையும் படிங்க:ட்விட்டர் வாசிகளிடம் வசமாக சிக்கிய இம்ரான் கான்!