தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த துருக்கி! - துருக்கி

அங்காரா : துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.

துருக்கி
துருக்கி

By

Published : Oct 31, 2020, 11:19 PM IST

கிரேக்க தீவான சமோஸுக்கும் துருக்கிய கடற்கரைக்கும் இடையே அமைந்துள்ள ஏஜியன் கடலில் வெள்ளிக்கிழமை (அக்.30) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போதுவரை இதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. இடிந்துவிழுந்த கட்டடங்களின் இடுபாடுகளில் சிக்கி 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக, மேற்கு துருக்கியின் நகரமான இஸ்மிருக்கு தெற்கே உள்ள செஃபெரிஹிசர் மாவட்டத்தில் சிறு சுனாமி ஒன்று ஏற்பட்டது. அதனைத்தொடந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டிலி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஹலுக் ஓசனர் தெரிவித்தார்.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் துருக்கியின் மூன்றாவது பெரிய நகரமான இஸ்மிரில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 709 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிர்வாகத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களில் துருக்கிய மருத்துவ சங்கத்தின் இஸ்மீர் கிளையின் பொதுச்செயலாளரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். துருக்கிய கடற்கரையைத் தாக்கிய இந்த சிறு சுனாமியால், அந்நாட்டின் பிரதான துறைமுக நகரமான வாத்தியில் கடல் நீர் புகுந்துள்ளது.

இந்நிலையில், கடற்கரையிலிருந்தும், சேதமடைந்த கட்டடங்களிலிருந்தும் மக்கள் விலகி இருக்குமாறு அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அலகில் பாதிவாகியுள்ளதாக காண்டிலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details