பாகிஸ்தான் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இன்று காலை வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டுக்-கொண்டிருந்தது. இந்த விமானம் மோரா கலு என்ற இடத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.
குடியிருப்புப் பகுதிக்குள் நொறுங்கி விழுந்த விமானம்: 19 பேர் பலி - rawalpindi
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் குடியிருப்புப் பகுதிக்குள் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
plane-crash
இந்த விபத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் உள்பட 19 பேர் பலியாகினர்.மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த விபத்தால் குடியிருப்புப் பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.