தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நவாஸ் ஷெரீஃப் உடல்நிலை கவலைக்கிடம்! - நவாஸ் ஷெரிப் உடல்நிலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல் நவாஸ்) கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரிப்

By

Published : Nov 11, 2019, 9:42 AM IST

‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, மருத்துவச் சிகிச்சைக்காக அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

கவலைக்கிடமான நிலையில் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்த அவர், பின்னர் உடல்நலம் சற்று தேறியதும், லாகூரின் ஜதி உம்ராவில் உள்ள அவரது வீட்டுக்குத் திரும்பினார்.

இந்நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸ் ஷெரீஃபுக்கு சிகிச்சை அளித்துப் பார்த்துவிட்டதாகவும் அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மகளுக்கு பிணை...!

ஆனால், நவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல தடையிருப்பதால், அதற்கு அனுமதி கோரி அவரது குடும்பத்தினர் அரசிடம் விண்ணப்பித்தனர். அதனைப் பரிசீலித்த பாகிஸ்தான் அரசு அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது.

பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு உதவியாளர் நயீம் உல் ஹக் கூறுகையில், “பாகிஸ்தானியர் அனைவருக்கும் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உரிமை உள்ளது. அந்த அடிப்படையில் நவாஸ் ஷெரீஃபின் மருத்துவ அறிக்கைகளைப் பார்வையிட்டு அவரது உடல் நிலையைக் கருத்திற்கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்

அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நவாஸ் ஷெரீஃப், தனது சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் லண்டனுக்குப் புறப்பட்டுச் செல்வார் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்தது. ஆனால் வெளிநாடு செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து நவாஸ் ஷெரீஃபின் பெயரை நீக்காததால் அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதனால் திட்டமிட்டபடி நேற்று காலை அவர் லண்டன் புறப்படவில்லை. நவாஸ் ஷெரீஃப் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரித்துவரும் தேசிய பொறுப்புடைமை விசாரணைக்குழு, அவர் வெளிநாடு செல்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை எனச் சான்றிதழ் வழங்காததே தடை பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்காததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து பிஎம்எல் நவாஸ் கட்சியினர், இம்ரான் கான் அரசு வேண்டுமென்றே அதனைத் தாமதப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டினர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீண்டும் கவலைக்கிடம்!

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இம்ரான்கான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து நயீம் உல் ஹக் கூறுகையில், “அரசியல் வேறு, உடல்நிலை சார்ந்த பிரச்னை வேறு என்பதில் இம்ரான்கான் தெளிவாக இருக்கிறார். அத்துடன் இந்தப் பிரச்னைக்கு சட்ட ரீதியில் தீர்வு காண்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் அவர் ஆராய்ந்துவருகிறார்” என்று குறிப்பிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details