தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஏழு மாவட்டங்களில் உயிரிழப்பினை ஏற்படுத்திய ஆம்பன் - bangladesh

டாக்கா: வங்க தேசத்தில் ஆம்பன் புயல் தாக்கத்தினால், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Cyclone Amphan hits Bangladesh coast, 12 killed
Cyclone Amphan hits Bangladesh coast, 12 killed

By

Published : May 22, 2020, 8:01 AM IST

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்ட 'ஆம்பன்' புயல், அதிதீவிரப் புயலாக மாறி மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து கரையைக் கடந்தது.

இந்தப் புயலினால் வங்க தேசக் கடலோர மாவட்டங்களான படுவாகாலி, சத்கிரா, பிரோஜ்பூர், போலா, பார்குனா உள்ளிட்டவற்றில் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

புயல் பாதிப்புகளை மக்களுக்கு அறிவிக்கவும், புயல் கரையைக் கடப்பதைத் தெரிவிக்கவும் மோங்லா மற்றும் பெய்ராவின் கடல் துறைமுகங்களில், 9ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், சாட்டோகிராம் மற்றும் காக்ஸின் பஜார் துறைமுகங்களில் 9ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கடலோர மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள், தீவுகளில் 10-15 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன. இதுவரை, ஆம்பன் புயலில் சிக்கி, ஏழு மாவட்டங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆம்பன் புயல்: 22 லட்சம் பேரை வெளியேற்றிய வங்க தேசம்!

ABOUT THE AUTHOR

...view details