தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கோவிட் 19: சார்க் நாடுகளின் சுகாதார பணியாளர்களுக்கு காணொலி பயிற்சி - வெளியுறவுத்துறை செயலர் டி.எஸ் திருமூர்த்தி

டெல்லி: இந்திய வெளியுறவுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சார்க் சுகாதாரப் பணியாளர்களுக்கான காணொலி பயிற்சி இன்று நடைபெறுகிறது.

MEA
MEA

By

Published : Apr 24, 2020, 12:06 PM IST

கரோனா பாதிப்பு தொடர்பாக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நோய் பாதிப்பை தடுக்க செயலாற்றிவருகிறது. குறிப்பாக உலகின் 20 பெரும் பொருளாதார சக்திகளான ஜி-20 நாடுகள் வைரஸ் பாதிப்பை ஒன்றிணைந்து எதிர்கொண்ட நிலையில், தெற்காசிய நாடுகளான சார்க் அமைப்பும் தங்களின் வெளியுறவுத் துறை மூலம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

அண்மையில் சார்க் நாடுகள் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய காணொலி காட்சியில் சார்க் கரோனா தடுப்பு நிதி உருவாக்கப்பட்டு அதில் உறுப்பு நாடுகள் அனைத்தும் முக்கிய பங்களிப்பை மேற்கொண்டுள்ளன.

தெற்காசிய நாடுகளின் கூட்டுறவை இந்தியா தலைமைத் தாங்கி நடத்திவரும் நிலையில், தற்போது சார்க் நாட்டு சுகாதார பணியாளர்கள் இணைந்து கோவிட் தடுப்பு சிறப்பு பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.

இது குறித்து வெளியுறவுத்துறை செயலர் டி.எஸ் திருமூர்த்தி பேசுகையில், ”பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு மேற்கொண்டுவரும் முன்னெடுப்புகள் சார்க் நாடுகள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. தலைவர்கள் மட்டுமில்லாது சார்க் நாடுகளின் துறை சார்ந்த நிபுணர்களும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இதன் பகுதியாக உறுப்பு நாடுகளின் சுகாதாரத் துறை பணியாளர்கள் இணைந்து காணொலி காட்சி மூலம் பயிற்சி எடுக்கவுள்ளனர். இந்த நிகழ்வு இன்று தொடங்கவுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா எதிர்கொள்வதில் 93.6% விழுக்காடு மக்கள் மோடி மீது நம்பிக்கை - ஆய்வு தகவல்

ABOUT THE AUTHOR

...view details